Q
த ரெரர்ரிஸ்ற் கதையை ஓர் ஆறு வயதுப்பெண்ணை வைத்து, குண்டு வைக்கத் தயார்ப்படுத்தும் பெண்ணின் பார்வையிலே ஓடும் படம். எடுத்தவரின் அரசியல் எதுவெனத் தெரியவில்லை. படம் நோகச்செய்வது.
Madaari
அர்ஜுன் படம்போல.... மகனைக் கட்டிட இடிபாடுகளுக்கிடையே பலிகொடுத்த நாயகன் அரசியல்வாதியின் மகனைக் கடத்திக்கொண்டுபோய், கட்டிடம் இடியக் காரணமான கறைக்கைகாரர்களினைப் பகிரங்கமாகத் தொலைக்காட்சிக்கு இட்டு வரும் சாதாரணம், படம். இர்பான் கான் இருப்பதாலே முடிவுவரை பார்க்கவேண்டியதாயிற்று.. தமிழிலே விஜய் சேதுபதி போல, இயல்பான நடிப்புக்காகப் பார்க்கவேண்டிய இரு இந்தி நடிகர்களிலே இவர் ஒருவர்; அடுத்தவர், நவாசுதீன் சித்திக்.
Revelations (2016)
கல்கத்தாவிலே வாழும் இரு தமிழ்க்குடும்பங்களைச் சுற்றி நகரும் கதை.
ஆர்ப்பாடமற்ற ஓட்டம். பாத்திர வார்ப்புகளும் சிறப்பு - வங்காளப்பெண்பத்திரிகையாளரின் வார்ப்பினைத் தவிர்த்து. அவரின் பாத்திரம் தட்டையானதாகத் தெரிகிறது. இன்னொரு குறைபாடாகச் சொல்லக்கூடியது மனோகர்/கல்யாணியின் முன்கதை. சினிமாத்தனமாக இந்த மாற்றுத்திரைப்படத்துக்கு விலகி நிற்கிறது. மிகுதிப்படி, மிகவும் முழுமையான உணர்வினைத் தந்த படம்.
திதி: (2015)
கன்னடப்படம். நூறு வயதைத்தாண்டி இறந்தவரின் செத்தவீட்டினைச் சுற்றி, மகன், பேரன், கொள்ளுப்பேரனைச் சுற்றி அவரவருகான பிரச்சனைகளையும் அவசரங்களையும் போக்குகளையும் பிணைத்து நகரும் படம். தொழில்முறை நடிகர்களையே கொள்ளாது எடுக்கப்பட்டிருக்கின்றது படத்துக்கான சிறப்பு.